இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘கங்குவா’.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கங்குவா” திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
டிரெய்லரில் ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்ட இருக்கிறது. இந்திய சினிமா வியந்து பார்க்கும் அளவுக்கு டிரெய்லர் காணப்படுகின்றது.
சஸ்பென்ஸுடன் வெளியான கொட்டுக்காளி ட்ரைலர்!
டிரைலரின் இறுதியில் நடிகர் கார்த்தி வருவது போல் தெரிகிறது. ஆனால், அதனை தெளிவாக காட்டவில்லை, சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
பேண்டஸி படமான ‘கங்குவா’ சுமார் 38 மொழிகளில் மிகவும் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது.