Sun, Sep25, 2022
Homebusinessதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதாக நிபுணர் கணித்துள்ளனர்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது ஜூன் 14 மற்றும் ஜூன்15 திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, வரவிருக்கும் விழாக்காலங்களில் தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க