Saturday, April 20, 2024
Homeஉலகசெய்திகள்பருப்பு கறியில் தங்கம் சேர்க்கும் ஹோட்டல்; வாய் பிளக்கும் மக்கள்!

பருப்பு கறியில் தங்கம் சேர்க்கும் ஹோட்டல்; வாய் பிளக்கும் மக்கள்!

HTML tutorial

பருப்பு கறியில் தங்கம்: நாளுக்கு நாள் தங்கவிலை எகிறும் நிலையில் தங்கம் போட்டு தயாரிக்கப்படும் பருப்பு குழம்பு வைரலாகி வருகின்றது.

துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் துபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார்.

பருப்பு கறியில் தங்கம் சேர்க்கும் ஹோட்டல்; வாய் பிளக்கும் மக்கள்!

இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 காரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான்.

இதனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது.

முதன்முறையாக உலகளவில் ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை

இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும். துபாயில் உள்ள பிரபல சிட்டி மாலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 84 லட்சம் பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்