- Advertisement -
நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. முகுல் மாவட்டம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த நேபாள ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்துள்ள பலரது நிலைமை கவலை அளிப்பதாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.
விசாரணையில், பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இந்த பஸ்சில் பயணித்துள்ளனர் என தெரியவந்தது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.