நம்பர் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்? பழைய கிசுகிசுகள் ஓவர்… மாப்பிள்ளை அந்த நடிகராமே!

ரசிகர்களால் “ஸ்லிம் பியூட்டி”, “நம்பர் நடிகை” என கொண்டாடப்படும் இவர், இதுவரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வந்தார்.
நம்பர் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்? பழைய கிசுகிசுகள் ஓவர்… மாப்பிள்ளை அந்த நடிகராமே!

கோலிவுட்டில் கடந்த பல ஆண்டுகளாக டாப் இடத்தை தக்க வைத்திருக்கும் அந்த நம்பர் நடிகையைப் பற்றி மீண்டும் ஒரு சூடான கிசுகிசு பரவி வருகிறது. ரசிகர்களால் “ஸ்லிம் பியூட்டி”, “நம்பர் நடிகை” என கொண்டாடப்படும் இவர், இதுவரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வந்தார். இடையில் விசேஷம் நடக்கும் என்ற பேச்சுகள் எழுந்தும், அவை அனைத்தும் பாதியில் நின்றுவிட்டன. ஆனால் இப்போது, அந்த நடிகை தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த நடிகை, அறிமுகமான முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டவர். கோலிவுட்டில் மட்டுமின்றி, டோலிவுட்டிலும் பிசியாக நடித்து, முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கிளாமர் வேடமாக இருந்தாலும் சரி, குடும்பப் பெண் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எந்த ரோல் கொடுத்தாலும் அது அவருக்கு சரியாக செட் ஆகும் என்பதே அவரது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவருடைய சினிமா பயணத்தில் சிறிய சரிவுகள் இருந்தது உண்மைதான். இருந்தாலும், அதைக் கண்டு தளராமல், கதைகளில் கவனம் செலுத்தி, தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடித்தார். அந்தப் படங்கள் ஹிட்டாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும், நடிகைக்கு பெயரும் வந்தது, சம்பளமும் குறையவில்லை.

சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்களைச் சுற்றி கிசுகிசுக்கள் வருவது சாதாரணமான விஷயம்தான். ஆனால் இந்த நடிகையின் விஷயத்தில் அந்த கிசுகிசுகள் எல்லை மீறியதாகவே பலர் பேசினர். ஒருகாலத்தில் ஒரு நடிகருடன் சேர்த்து வைக்கப்பட்டு, இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள் என்ற அளவுக்குக் கூட பேச்சுகள் பரவின. அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக சொல்லப்பட்டது. பின்னர் பக்கத்து மாநிலத்து நடிகருடன் நெருக்கம் என புதிய கிசுகிசு, அதுவும் சில காலத்தில் முடிவுக்கு வந்தது.

அதற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் திருமணம் வரை போகும் அளவுக்கு விஷயம் சென்றதாக பேசப்பட்டாலும், அது கூட நடைமுறைக்கு வரவில்லை. இதையடுத்து, “ரிலேஷன்ஷிப் வேண்டாம்” என்ற முடிவில் நடிகை இருப்பதாகவே அனைவரும் நினைத்தனர். இந்த நிலையில், ஒரு மாஸ் நடிகருடன் மீண்டும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கியதும், இருவரையும் சேர்த்து வைத்து புதிய கிசுகிசுகள் கிளம்பின. ஆனால் அதற்கு நடிகையும் நடிகரும் எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தனர்.

இப்போது, இந்த எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. நடிகையின் வயது அதிகரிப்பதை நினைத்து அவரது தாய் மிகவும் கவலைப்பட்டதாகவும், திருமணம் குறித்து தொடர்ந்து பேசித் தான் மகளின் மனதை மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. “எனக்கு பிறகு உனக்கு ஒரு துணை வேண்டும்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியதன் விளைவாக, நடிகையும் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

மேலும், “உன் மனதுக்கு பிடித்த நபரை நீயே சொல்லு” என்று தாய் கேட்டபோது, தன்னுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்த நடிகர் ஒருவரின் பெயரை அவர் கூறியதாக கிசுகிசு. ஏற்கனவே இருவரும் டேட்டிங் செய்து நல்ல புரிதலுடன் இருப்பதாகவும், இப்போது நடிகரின் குடும்பத்துடன் நடிகையின் தாய் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், நம்பர் நடிகையின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. பழைய பஞ்சாயத்துகள் எல்லாம் ஓவர்… புதிய வாழ்க்கை அத்தியாயம் தொடங்கப் போகிறதா என்ற கேள்விதான் இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர