நடிகர் டேனியல் பாலாஜி பற்றி தெரியாத தகவல்கள்

நடிகர் டேனியல் பாலாஜி காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரர் ஆவார்

டேனியல் பாலாஜி அம்மாவும், நடிகர் முரளி அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்

அந்த வகையில் நடிகர் அதர்வாவுக்கு, டேனியல் பாலாஜி சித்தப்பா உறவு

தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் பெற்றவர் டேனியல் பாலாஜி

சன் டிவியில் வெளியான சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த சீரியலில் அவருடைய கதாப்பாத்திரத்தின் பெயரான ‘டேனியல்’ பாலாஜியின் பெயருடன் சேர்ந்து இவருக்கு அடையாளமானது.

சன் டிவியில் வெளிவந்த அலைகள் என்ற சீரியலில் பாலாஜி நடித்துள்ளார். அப்போது அலைகள் சீரியலின் இயக்குனர் சுந்தர் . கே.விஜயன் என்பவரே இவருக்கு ‘டேனியல்’ பாலாஜி என பெயரிட்டார்.

சூர்யாவுடன் காக்க காக்க படத்தில் போலீசாக நடித்து கவனத்தை ஈர்த்தார். ‘நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் இல்ல’னு அவர் பேசும் வசனம் தற்போதும் காதுகளில் ஒலிக்கிறது.

2006-ல் கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய வில்லனாக அமுதன் எனும் கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

வட சென்னை படத்தில் தனித்துவமான கேரக்டரில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார். நடிகர் விஜயுடன் பைரவா மற்றும் பிகில் படங்களில் நடித்திருந்தார்.

மலையாளத்தில் 8 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொத்தம் 40 படங்களில் நடித்துள்ளார் டேனியல் பாலாஜி.