அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிளுக்கு அதிரடி தண்டனை: ₹5,622 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மீது அமெரிக்க நீதிமன்றம் விதித்த 634 மில்லியன் டாலர் அபராதம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மீது அமெரிக்க நீதிமன்றம் விதித்த 634 மில்லியன் டாலர் அபராதம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Massimo Corporation எனும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம், ஆப்பிள் வாட்சில் உள்ள Blood Oxygen Sensor தங்களது காப்புரிமையை மீறுவதாக வழக்குப் பதிவு செய்தது.
விசாரணை முடிவில், கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றம், மாசிமோவின் புகார் நியாயமானது எனத் தீர்மானித்து, ஆப்பிள் 2020–2022 காலப்பகுதியில் விற்ற 43 மில்லியன் சாதனங்களுக்காக இழப்பீடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாசிமோ, இதை “அறிவுசார் சொத்து உரிமை காக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றம்” என வரவேற்றுள்ளது. ஆப்பிள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இதே விவகாரம் காரணமாக 2023-இல் ITC (International Trade Commission) சில ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதியை தடை செய்திருந்தது.
Editorial Staff