ஆங்கிலக் கால்வாயில் ரஷ்யா அச்சுறுத்தல் – லேசர் தாக்குதலால் பரபரப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய கப்பல்களின் அச்சுறுத்தல் 30% உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கிலக் கால்வாயும் டோவர் ஜலசந்தியும் சமீபத்தில் அதிகமான பதற்றத்தை சந்தித்து வருகின்றன. ரஷ்யப் போர் கப்பல்களின் நடவடிக்கை இப்பகுதியில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய கப்பல்களின் அச்சுறுத்தல் 30% உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி சமீபத்தில் வெளியிட்ட தகவலில், ரஷ்யாவின் யந்தர் (Yantar) எனப்படும் உளவுக் கப்பல், இங்கிலாந்து கடல் எல்லைக்கு அருகில் நாட்டு விமானிகளைக் குறிவைத்து லேசர் ஒளி வீசி அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.
“நாங்கள் உங்களை கவனித்து வருகிறோம்; நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்கு பின்னர், வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த ராயல் விமானப்படையின் P-8 போஸிடான் கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Editorial Staff