Thu, Jul29, 2021
Homeசெய்திகள்கிழக்குமட்டக்களப்பில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று (14) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் நேற்று மாலை குறித்த சிறுமியின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில், குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அதன்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இருசிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறிமியை பாலியல் பலத்காரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர், குறித்த இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருதாகவும் தெரிவித்தனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi