புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குறித்த நடவடிக்கை மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும் மற்றும் அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Editorial Staff