Saturday, April 20, 2024
Homeகிரிக்கெட்டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

HTML tutorial

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா (18), தவான் (36) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர்.

ஆனால் தவான் 39 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 23 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பண்ட் 6 ரன்னிலும், ஹெட்மையர் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 30 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.

அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 123 ரன்னாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது.

ஷுப்மான் கில் 46 பந்தில 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நோர்ஜே. இதனால் கடைசில் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ரன் அடித்தார. 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார்.

இதனால் கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்