Saturday, April 20, 2024
Homeகிரிக்கெட்ஐசிசி டி20 தரவரிசை - முதல் 10 இடத்தை இழந்த விராட் கோலி

ஐசிசி டி20 தரவரிசை – முதல் 10 இடத்தை இழந்த விராட் கோலி

HTML tutorial

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் விராட் கோலி வரலாறு காணாத அளவு சரிவைக் கண்டுள்ளார்.

டாப்-10 இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி இம்முறை டாப் 10-ல் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ரம் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 4-வது இடத்திலும், இந்தியாவின் கே.எல்.ராகுல் 5-வது இடத்திலும் உள்ளனர்.

முன்னாள் அணித் தலைவர் விராட் கோலி 657 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 11-வது இடத்திற்கு சரிவடைந்துள்ளார். ரோகித் சர்மா 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவரும் இடம்பெறவில்லை.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்