எரிபொருள் விலையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலையில் மாற்றம்

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 423 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 426 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 27 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 329 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 431 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 434 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 249 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 247 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *