Mon, Apr19, 2021
Homeமுக்கிய செய்திகள்இரு சிறுமிகளை கடத்திச் சென்ற இளைஞர்கள் வசமாக சிக்கினர்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

இரு சிறுமிகளை கடத்திச் சென்ற இளைஞர்கள் வசமாக சிக்கினர்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து வந்த 20 மற்றும் 21வயதுடைய இரண்டு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் சிறுமிகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளே இவ்வாறு பொலிசாரால் நாவற்குழி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்த இளைஞர்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.