Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுபுதிய வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்; இன்று கூடுகின்றது நிபுணர் குழு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்; இன்று கூடுகின்றது நிபுணர் குழு

கொரோனா வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக, குறித்த விடயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இன்று கூடவுள்ளது.

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதியளித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்புக்கமையவே மேற்கொள்ளப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இதுதொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், கொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றனது.

இதுதொடர்பாக ஆராய்ந்து, அடுத்தவார ஆரம்பத்தில் வழிகாட்டல் அடங்கிய அறிவிப்பை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.