Thu, Jul29, 2021
Homeசெய்திகள்கிழக்குகல்முனையில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

கல்முனையில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற அக்ஸயன் என்ற வயது 17 மாணவன் 8 ஆம் திகதி மாலை கல்முனைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi