Sun, Dec5, 2021
Homeவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் இன்று (18) காலமாகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது டெஸ்ட் தலைவரான பந்துல வர்ணபுர, 1975 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொண்டார்.

தொடர்ந்து, 1982 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியில் இருந்த அவர், 4 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க