அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு, பலர் காயம்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு இந்த துப்பாக்கிச் சூட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு, பலர் காயம்

அமெரிக்காவின் Brown University வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நேரப்படி மாலை 4.05 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த வேளையில் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தேக நபர், கருப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு ஆண் என மட்டும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு இந்த துப்பாக்கிச் சூட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே தப்பியோடிய சந்தேக நபரை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.