Thu, Jul29, 2021
Homeசெய்திகள்உள்நாடுமுன்னாள் பிரதமர் ரணில் பெயர் வர்த்தமானியில் வெளியானது

முன்னாள் பிரதமர் ரணில் பெயர் வர்த்தமானியில் வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினராக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (18) வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (18) வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்துக்கு, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து தீரமானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(18) கூடியது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பதற்காக, அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு ஆணைக்குழு அனுப்பியிருந்தது.

தேசியப் பட்டியில் உறுப்புரிமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணத்தை, ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்தவார ஆரம்பத்தில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi