பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பயாகல பொதுவில சுகாதாரப் பிரிவில், பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றிய ருவித பண்டார என்பவர், டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.