Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுO/L கற்கைக் காலம் குறைப்பு; குறைந்த வயதிலேயே பல்கலைக்கழ வாய்ப்பு

O/L கற்கைக் காலம் குறைப்பு; குறைந்த வயதிலேயே பல்கலைக்கழ வாய்ப்பு

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கப்படும் காலத்தைக் குறைத்துக் கொள்வதற்காக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் முறைமைகளில் மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்த, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைக்கே, இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, சாதாரணதர மாணவர்களுக்கான தரம் 10 மற்றும் 11க்கான பாடவிதானங்களை அரசாங்கம் 21 மாதங்களாகக் குறைத்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட தரங்களுக்கான பாடவிதானங்கள், 3 மாதங்களால் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் வழமையாக நடைபெற்றுவந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை, டிசெம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ள அரசாங்கம், இவ்விரு பிரதான பரீட்சைகளில் பெறுபேறுகளை, 3 மாதங்களுக்குள் வௌயிடத் தீர்மானித்துள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தின் ஊடாக, தரம் 11 தொடக்கம் பல்கலைக்கழக அனுமதி பெறப்படும் வரையில் செலவாகும் 45 மாதக் காலப்பகுதி, 32 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (04) உரையாற்றிய அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அரசாங்கத்தின் இந்தப் புதிய செயற்றிட்டம் காரணமாக, குறைந்த வயதிலேயே பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்குமென்றார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில், 16 – 17 வயதுகளிலேயே, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர் என்றும் ஆனால் இலங்கையில், 19 – 20 வயதுகளிலேயே உள்வாங்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைமையின் ஊடாக, 17 – 18 வயதிலேயே பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பை மாணவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi