Homeசெய்திகள்உள்நாடுபயணக்கட்டுப்பாடு தளர்தப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

பயணக்கட்டுப்பாடு தளர்தப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை இன்று (18) தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi