- Advertisement -
விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது நேற்று (15) பிற்பகல் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனா தொற்று முடிவடையும் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பை துரிதப்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.
அதன்படி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். அதற்காக கட்சியின் அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்தும் திட்டம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். மக்களின் பிரச்சினைகள், வறுமை நிலை வேகமாக அதிரித்துள்ளது.
இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நம்பமாட்டேன். உரிய திட்டமிடல் மூலம்தான் இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்” என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.