Sun, Sep25, 2022
Homeதேசியசெய்திகள்இலங்கையிலிருந்து மேலும் ஏழு பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து மேலும் ஏழு பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள், 4 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு, இந்தியாவின் தமிழகம் – தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பி சென்றுள்ளது.

தீடை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிஸார் கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்துள்ளவர்கள் வடக்கு மற்றும் திருகோணமலை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க