- Advertisement -
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வென் ஜியாபோ, கொழும்பு துறைமுக நகருக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர் மரீனா நடை பயிற்சி தடாகத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, துறைமுக நகர் நடைபயிற்சி தடாகத்திற்கு செல்ல ஓரிரு தினங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகாத்திடலில் ஜனாதிபதி செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.