Friday, March 29, 2024
Homeதேசியசெய்திகள்போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

HTML tutorial

நாடு முழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

சந்தேகத்துக்கு இடமான நாணயத்தாள் ஒன்று காணப்பட்டால் நாணயத்தாளை கொண்டு வந்தவர், அவரது தோற்றம், வாகனத்தில் வந்தால் வாகனத்தின் விவரம், பணத்தாளின் மதிப்பு மற்றும் வரிசை எண் ஆகியவற்றைப் பதிவு செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயப் பிரிவின் 0112422176 மற்றும் 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க வேண்டும்.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

மேலும் செய்திகள்

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க