- Advertisement -
அரச சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அரச சேவை பயிற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அதே பாடசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தரமாக நியமிக்கப்படலாமென அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.