கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்ரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த கொழும்பு அலரி மாளிகைக்கு அவர் ஒருபோதும் இடம் பெயர்ந்ததில்லை.
உத்தியோகபூர்வ வேலைக்காக அலரி மாளிகைக்கு சென்றாலும், இந்த வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார்.
இந்த வீடு பிரதமரால் மரபுரிமையாக பெறப்பட்டு பழைய கட்டிடக்கலைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நூலகம்
இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன. இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
றோயல் கல்லூரிக்கு உயில்
தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த வீட்டில்தான் தனது வாழ்நாளைக் கழித்தார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.