அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை … அதிர்ச்சியளித்த ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன், தான் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவதாகவும், அது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன், தான் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவதாகவும், அது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘டிரெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எல்லோரையும் போல நானும் செல்போனை ரொம்ப அதிகமாக பயன்படுத்துகிறேன். எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்துவதில்லை. அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், தனது செல்போன் பயன்பாடு குறித்துப் பேசுகையில், “அதேபோல சில நேரங்களில் அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும். அதை ஒன்றும் செய்யமுடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Editorial Staff