Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது

கடந்த வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களை அண்மித்த பகுதிகளில் நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi