Sun, Sep25, 2022
Homeஇந்தியச்செய்திகள்ரூபாய் நோட்டுக்களை தெருவில் பறக்கவிட்ட இளைஞன்

ரூபாய் நோட்டுக்களை தெருவில் பறக்கவிட்ட இளைஞன்

காரில் செல்லும்போது ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட இளைஞரை காவல்துறை கைது செய்து, காரையும் கைப்பற்றியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் காரில் பயணித்த இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுக்களை தெருவில் பறக்கவிட்டிருக்கிறார். மேலும், சைரன் பொருத்தப்பட்ட அந்த காரை அதிவேகமாக இயக்கிய அந்நபர் சைரனை ஒலிக்க செய்திருக்கிறார்.

இதனை மற்றொரு காரில் பயணித்த அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

இதனிடையே உத்திரப் பிரதேச மாநில காவல்துறை இந்த வீடியோ குறித்து விசாரணையில் ஈடுபட்டது. இதன் பலனாக அந்த இளைஞரை கைது செய்துள்ள போலீசார், அவர் சென்ற வாகனத்தையும் சிறைபிடித்துள்ளனர்.

சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை இயக்கியதாக அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் காவல்துறை, ட்விட்டர் பக்கத்தில்,”சாலையில் நீங்கள் ஸ்டண்ட் செய்ய நினைத்தால், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். உங்களை கைது செய்வதுடன் உங்களது காரும் பறிமுதல் செய்யப்படும்” என்று என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் எந்த செக்ஷனில் காவல்துறையினர் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. தனியார் வாகனங்களில் சைரனை ஒலிக்க செய்வது குற்றமாகும்.

மேலும், சக வாகன ஓட்டிகளை திசைதிருப்பும் விதமாக பணத்தினை தெருவில் வீசியதற்காக காவல்துறை அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த இளைஞரின் காரை காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி, அதனை சோதனையிடும் வீடியோ ஒன்றையும் காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கிய இளைஞரை கைது செய்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் காவல்துறையினரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க