Sun, Sep25, 2022
Homebusinessதங்கம் வாங்கவா போறீங்க? இன்னைக்கு வேணாம், நாளைக்கு போங்க!

தங்கம் வாங்கவா போறீங்க? இன்னைக்கு வேணாம், நாளைக்கு போங்க!

நீங்கள் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தால் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. ஏனெனில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,760 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,740 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 38,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.67 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,139 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,159 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 41,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 41,272 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,710 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,750 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,750 ஆகவும், கேரளாவில் ரூ.4,742 ஆகவும், டெல்லியில் ரூ.4,750 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,750 ஆகவும், ஒசூரில் ரூ.4,742 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,746 ஆகவும் இருக்கிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க