அமெரிக்கா விசா நிராகரிப்பு.. விரக்தியில் பெண் மருத்துவர் எடுத்த முடிவு!

சமீப வருடங்களில் அமெரிக்க விசா செயல்முறைகள் கடுமையானதாக மாறியுள்ள நிலையில், விசா நிராகரிப்பால் மன உளைச்சலுக்குள்ளான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ரோகிணி (38) உயிரிழந்தது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூரைச் சேர்ந்த ரோகிணி, ரஷ்யா மற்றும் கிர்கிஸ்தானில் மருத்துவப்படிப்பு முடித்து, அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் பணிப்பயிற்சி பெறுவதற்காக ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்யவும் சில மாதங்கள் அங்கிருந்தும் முயற்சிகளைத் தொடர்ந்து வந்தார். ஆனால் விசா நிராகரிப்பு காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விசா மறுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ரோகிணி ஹைதராபாத்தில் உள்ள பத்ம ராவ் நகரில் தனியாக வசித்து வந்த இடத்தில் மயங்கி கிடப்பதை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவத்துக்கு தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் விசா பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து குறிப்பிட்டிருப்பதாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன.

ரோகிணியின் தாயார் லட்சுமி, “என் மகள் மிகவும் திறமையானவர். அமெரிக்காவில் மருத்துவப் பணியில் சேர வேண்டும் என்ற அந்த உந்துதலே அவர் வாழ்க்கை இலட்சியம். விசா மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன உளைச்சல் அதிகரித்தது,” என வருத்தத்துடன் கூறினார்.

இந்த சம்பவம், வெளிநாட்டு கல்வி மற்றும் பணிவாய்ப்பு முயற்சிகளில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தைப் பற்றி பரவலாகப் பேசப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.