Friday, April 19, 2024
Homeவாழ்க்கைமுறைபெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா

பெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா

HTML tutorial

பெண்கள் பலர் விரும்பி அணியும் தங்கம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள்.

பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன.

உடல் வெப்பத்தை சீராக்குகிறது

தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது.

உதாரணத்துக்கு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும். தங்க நகை அணிவதன் மூலம் வெப்ப நிலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

காயங்களுக்கான சிகிச்சை

இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது.

பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள். இதன் மூலம் காயங்களும் குணமாகும், அவற்றால் ஏற்படும் நோய் தொற்றும் தடுக்கப்படும்.

வாதத்தை தடுக்கும் மருந்து

வாத நோய் ஏற்படும்போது, விரல்களையும் கால்களையும் அசைப்பது சிரமமாக இருக்கும்.

தங்க நகை அணிவதன் மூலம் உடம்பில் நேர்மறை சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வாதத்தால் ஏற்படும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதனை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள்.

பெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா

மனக்கவலையை குறைக்கிறது

பெண்கள் அதிக அளவில் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பதற்றமும், பயமும் ஏற்பட்டு நீண்ட கால கவலையாக உருவாகிறது.

தங்க நகைகளை அணிவதன் மூலம், அவர்கள் உடலில் ‘நேர்மறை சக்தி’ பரவுகிறது.

இதனால் உடலில் அமைதியான நிலை ஏற்பட்டு ரத்த நாளங்களை சீராக்குகிறது.சுவாசக் காற்றை உடல் உறுப்புகளுக்கு சரி சமமாக அனுப்பி நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

மருத்துவ பயன்பாடு

புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுகிறது. மது போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தங்கம் பயன் படுத்தப்படுகிறது.

தங்க நகை அணிவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகள் வலுவாகிறது. உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.

அதுபோல, தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்