பெண் ஒருவர் மரணம் தொடர்பில் பிரித்தானியாவில் 13 வயது சிறுமி கைது
பிரிட்டனின் ஸ்விண்டன் நகரில் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து, 13 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டனின் ஸ்விண்டன் நகரில் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து, 13 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்ட்ஷயர் பகுதியில் உள்ள மோர்டன் பேடன் க்ளோஸ் குடியிருப்பிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு சுமார் 50 வயதான பெண் ஒருவர் உணர்வற்ற நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டாலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மரணம் குறித்த முழு விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேகநபராக கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
Editorial Staff