200 ஆண்டுகள் பழமையான உணவுச் சண்டை திருவிழா; மாவும் முட்டைகளும் பறந்த கொண்டாட்டம்!

இந்த விழா, சிறுவயதில் விளையாடும் 'திருடன்–போலீஸ்' விளையாட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது; ஆனால் இதில் தண்டனை மட்டுமே உணவுப்பொருட்களால் கொடுக்கப்படுவதால், அதில் எந்த தீமையும் இல்லை.

200 ஆண்டுகள் பழமையான உணவுச் சண்டை திருவிழா; மாவும் முட்டைகளும் பறந்த கொண்டாட்டம்!

ஸ்பெயினின் அலிகாந்தே மாகாணத்தில் உள்ள இபி (Ibi) நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘எல்ஸ் என்ஃபாரினாட்ஸ்’ (Els Enfarinats) திருவிழா இந்த ஆண்டும் (2025) மிகுந்த உற்சாகத்துடனும் வேடிக்கையுடனும் நடைபெற்றது. 

200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த திருவிழா, ஸ்பெயினில் 'ஏப்ரல் ஃபூல்ஸ்' தினம் போலக் கருதப்படும் 'டே ஆஃப் தி இன்னோசென்ட்ஸ்' (Day of the Innocents) அன்று கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நகரைக் கைப்பற்றும் போலியான 'இராணுவம்'. இராணுவச் சீருடையில் அலங்கரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் (Els Enfarinats) ஒரு போலிப் புரட்சி நடத்தி நகரை கைப்பற்றி, தங்களுக்கென்று ஒரு மேயரைத் தேர்ந்தெடுத்து புதிய விதிகளை அமல்படுத்துவர். இதன் போது மற்றொரு குழு நகரில் அமைதியை நிலைநாட்ட முயல்கின்றனர். இரு தரப்பினரும் முட்டைகள், மாவு மற்றும் பட்டாசுகளை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டாடுகின்றனர், இதனால் நகரம் வெள்ளை நிறத்தில் மூடியதாக தோன்றும் காட்சிகள் உருவாகின்றன.

திருவிழாவில் நன்கொடை வசூலும் ஒரு முக்கிய அம்சமாகும். பங்கேற்பாளர்கள் மக்களிடம் "வரி" அல்லது "அபராதம்" எனக் கூறி பணம் வசூலிப்பார்கள்; பணம் தர மறுப்பவர்களை முட்டைகள் மற்றும் மாவு வீசுவதன் மூலம் "தண்டிக்கப்படும்". வசூலிக்கப்பட்ட நன்கொடைகள் பின்னர் தர்மக் காரியங்களுக்காக வழங்கப்படும்.

இந்த விழா, சிறுவயதில் விளையாடும் 'திருடன்–போலீஸ்' விளையாட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது; ஆனால் இதில் தண்டனை மட்டுமே உணவுப்பொருட்களால் கொடுக்கப்படுவதால், அதில் எந்த தீமையும் இல்லை. சமூக வலைதளங்களில் சிலர் உணவு வீணடிக்கப்படுவதாக விமர்சனம் தெரிவித்தாலும், பயன்படும் முட்டைகள் மற்றும் மாவு பழையதும் கெட்டுப்போனதும் என ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கொண்டாட்டத்தின் படங்கள் சில இதோ :