பிரபல இயக்குனர் மனைவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கு: மகன் கைது
சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு ரெய்னர் தம்பதியர் வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி நடைபெற்றதாகவும், அப்போது நிக் தனது பெற்றோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல அமெரிக்க இயக்குநரும் நடிகருமான Rob Reiner தனது மனைவியுடன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவர்களின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
When Harry Met Sally உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியதோடு, பல படங்களில் நடித்துள்ள ரெய்னர் (வயது 78) மற்றும் அவரது மனைவி மிஷெல் சிங்கர் ரெய்னர் (வயது 68) ஆகியோர் அமெரிக்காவின் Los Angeles நகரில் உள்ள தங்களது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரின் உடல்களிலும் கத்திக் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், தம்பதியரின் மகன் நிக் ரெய்னர் முக்கிய சந்தேகநபராக குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் அடிமைத்தன்மையால் இளமையிலேயே மறுவாழ்வு மையத்துக்குச் சென்றதாகவும், அதன் விளைவாக வீடற்ற வாழ்க்கை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் நிக் முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு ரெய்னர் தம்பதியர் வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி நடைபெற்றதாகவும், அப்போது நிக் தனது பெற்றோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நடத்தை காரணமாக தம்பதியர் அசௌகரியமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வழக்கில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Editorial Staff