யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாயினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாயாக உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக காணப்பட்டது.
இதேவேளை, 24 கரட் தூய தங்கம் நேற்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.