Sun, Sep25, 2022
Homeமாவட்டச் செய்திகள்கொக்குவிலில் நான்காவது கொரோனாத் தடுப்பூசி

கொக்குவிலில் நான்காவது கொரோனாத் தடுப்பூசி

கொரோனாப் பெருந் தொற்றுத் தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி ஏற்றல் இன்று திங்கட்கிழமை, காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை கொக்குவில் வளர்மதி சன சமூக நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இதனை நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாத காலத்தைப் பூர்த்தி செய்தவர்கள் மூன்றாவதாக பைஃசர் தடுப்பூசியையும், மூன்றாவதாக பைஃசர் தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதத்தின் பின்னர் நான்காவதாக பைஃசர் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

தடுப்பூசியைப் பெற விருப்புபவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்களாயினும் தமது தடுப்பூசி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையிலுள்ள வளர்மதி சன சமூக நிலையத்துக்கு வருமாறும் நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரி மருத்துவர் அ.ஜெயக்குமாரன் அறிவித்துள்ளார்.

இதேநேரம், குறிப்பிட்ட சில நாடுகளுக்கான உள்நுழைவுத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்காக அவசரமாக பைஃசர் தடுப்பூசியைப் பெற விரும்புபவர்கள் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்ற நாளில் இருந்து ஒரு மாதத்தின் பின்னர் நான்காவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவ்வாறானவர்கள் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க