Tue, Aug16, 2022
Homeமாவட்டச் செய்திகள்கிழக்குவௌிநாடு செல்ல முயன்ற 64 பேர் திருகோணமலையில் கைது

வௌிநாடு செல்ல முயன்ற 64 பேர் திருகோணமலையில் கைது

சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

50 ஆண்களும் 11 பெண்களும் 3 சிறார்களுமே இலங்கை கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 07 ஆட்கடத்தல்காரர்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க