Sun, Sep25, 2022
Homeமாவட்டச் செய்திகள்ரயில் மோதி வவுனியாவில் குடும்பஸ்தர் பலி

ரயில் மோதி வவுனியாவில் குடும்பஸ்தர் பலி

வவுனியா,செப் 18

வவுனியா, ஓமந்தையில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் நேற்று இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதி தள்ளியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் மரணமடைந்துள்ள நிலையில், சடலம் ரயில் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க