Tue, Sep27, 2022
Homeமாவட்டச் செய்திகள்மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 12 பேர் காயம்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 12 பேர் காயம்

ஏ9 வீதியின் வவுனியா – பூனாவை பகுதியில் இன்று(14) அதிகாலை அதிசொகுசு பஸ் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூனாவை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதுடன் குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை அடுத்துக் குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க