- Advertisement -
காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, தலைமறைவாகிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன், அப்போது எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார். எனினும், விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர், பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார். அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் கூறப்படுகின்றது. பல பெண்களை காதலித்துள்ள அவர், அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும், வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார்.
அவற்றை, உறவினர்கள் மற்றும் இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.