Friday, April 19, 2024
Homeகிரிக்கெட்ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்த மிக மோசமான சாதனை

ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்த மிக மோசமான சாதனை

HTML tutorial

2024 ஐபிஎல் தொடரில், இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு தனது சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று (ஏப்ரல் 1) முதன்முறையாக களமிறங்கியது .

ஆனால் எதிர்த்து போட்டியிட்ட ராஜஸ்தான் அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் சஹாலின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 125 ரன்களுக்கு சுருண்டது.

அதன்பின்னர் ரியான் பராக்கின் அதிரடி அரைசதத்தால் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் ரோகித் சர்மா. ராஜஸ்தான் அணிக்காக ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட அவர், தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து கோல்டன் டக் அவுட் ஆனார்.

இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகி, அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்:

1) ரோகித் சர்மா – 17
2) தினேஷ் கார்த்திக் – 17
3) கிளென் மேக்ஸ்வெல் – 15
4) பியூஷ் சாவ்லா – 15
5) மன்தீப் சிங் – 15
6) சுனில் நரேன் – 15

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்