- Advertisement -
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களில் ஒரு தரப்பினருக்கு இன்று (22) முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, 16 – 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, தாம் கல்வி கற்கும் பாடசாலைகளிலேயே பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பயமின்றி அனுப்பி வைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இத்தகவலை தெரிவித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.