- Advertisement -
பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை சோதனை செய்யும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்ற எந்தவொரு சுகாதார வழிகாட்டல்களும் தற்போது வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து எதிர்வரும் காலங்களில் ஆராயப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.