Sat, Mar6, 2021
Home செய்திகள் உள்நாடு இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்.. விவரம் இதோ!

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்.. விவரம் இதோ!

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின. முன்னதாக 9 மரணங்கள் பதிவானமையே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்களின் எண்ணிக்கையாக இருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் 13 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பதிவான 13 மரணங்களில், 12 பேர் ஆண்களாவர் என்பதுடன் ஆறு பேரின் மரணங்கள் தங்களது வீடுகளில் பதிவாகியுள்ளன.

நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்று மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் அக்கரபத்தனை வைத்தியசாலையிலிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட தீவிர மூச்சிழுப்பு நோய் மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியுமோனியா, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் நிலைமையை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், போம்புவல பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

மோசமடைந்த மூச்சிழுப்பு நோய் தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாபொட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 10 ஆம் திகதி தனது வீட்டில் மரணித்தார்.

குருதி நஞ்சானமை, கொவிட்-19 தொற்று மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலைமையை அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கொண பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய் மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன் குருதி நஞ்சானமை மற்றும் இருதய நோய் நிலைமை அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்று, நுரையீரல் நோய் நிலைமை மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மரணித்தார்.

கொவிட்-19 நியூமோனியா, குருதி நஞ்சானமை மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேவுட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொவிட் தொற்றுடன் மோசமடைந்த இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK