- Advertisement -
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பான ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் இந்த தொடருக்கு மில்லியன் கணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர்.
’மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் ஐந்தாவது பாகத்தின் இரண்டாவது பகுதி வரும் டிசம்பர் 3ஆம் திகதி வெளியாக உள்ளது. இத்துடன் இந்த தொடர் முடிவடைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொடரின் இறுதியில் புரொபஸர் காவல்துறையிடம் மாட்டுவாரா? அவருடைய மற்ற கூட்டாளிகளின் நிலை என்ன என்பது குறித்த முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’மணி ஹெய்ஸ்ட்’ முடிவடைந்து விடும் நிலையில் அதன் தொடர்ச்சியாக ’பெர்லின்’ என்ற தொடர் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
’மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் முக்கிய கேரக்டர்களில் ஒருவர் பெர்லின் என்பது தெரிந்ததே. அவருடைய ஆரம்பகால வாழ்க்கை, சந்தித்த சவால்கள், திருமணம், குழந்தைகள் ஆகியவை குறித்த காட்சிகள் அந்த தொடரில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
’மணி ஹெய்ஸ்ட்’ தொடர் முடிவடைந்து விட்டது என சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.