கர்ப்பமான ஜெனிலியாவின் கணவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

கர்ப்பமான ஜெனிலியாவின் கணவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இருவரும் கர்ப்பமாக இருப்பது போன்ற புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில், மீண்டும் இந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

நடிகை ஜெனிலியாவின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான துஜே மெரி கசாம் எனும் இந்தி படத்தில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா.

கர்ப்பமான ஜெனிலியாவின் கணவர்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

அந்த படத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில், 2012ம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துக் கொண்டார்.

அதே ஆண்டு தமிழில் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், விவேக், செந்தில், தமன், பரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தென்னிந்தியாவில் உருவாக்கி தந்தது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் படு பிசியான நடிகையாக வலம் வந்தார் ஜெனிலியா. இன்னமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹாசினியாகவே வலம் வருகிறார்.

அவரை போல மற்ற நடிகைகள் செய்தால் அப்படியே ஜெனிலியான்னு நினைப்பு என சொல்லும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. தனுஷ் உடன் உத்தமப்புத்திரன், விஜய் உடன் வேலாயுதம் என தமிழில் மிக குறைந்த படங்களிலேயே நடித்திருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக் உடன் மீண்டும் இந்தியில் தேரே நா லவ் ஹோகயா படத்தில் நடித்த கையோடு அதே ஆண்டு அவருடன் திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா.

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனால், அவ்வப்போது இந்தி படங்களில் மட்டும் கேமியோவாக நடித்து வந்த அவர், தற்போது மீண்டும் கணவருடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ரித்தேஷ் தேஷ்முக் கர்ப்பமான வயிற்றுடன் காணப்படும் போஸ்டர் மற்றும் மிஸ்டர் மம்மி என வித்தியாசமான டைட்டிலுடன் உருவாகி வரும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அவர் அருகே நடிகை ஜெனிலியாவும் கர்ப்பமாக இருப்பது ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *