Friday, April 19, 2024
Homeசினிமாபிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

HTML tutorial

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். 48-வயதான டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானர்.

நிர்வாணமாக வந்த குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா; அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்கர் மேடை!

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

யார் இந்த டேனியல் பாலாஜி?

சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த பாலாஜி, அந்த நாடகத்தில் டேனியல் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

டேனியல் பாலஜி கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

டேனியல் பாலாஜியின் தனித்த குரல், மேனரிசம், உடல் மொழி ஆகியவை வில்லன் கதாப்பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி போனது.

இதனால் விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கதாநாயகனுக்கு சரிசமகாக பெயரும் புகழையும் பெற்றார் டேனியல் பாலாஜி.

நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். டேனியல் பாலாஜி அம்மாவும், நடிகர் முரளி அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.

அந்த வகையில் நடிகர் அதர்வாவுக்கு, டேனியல் பாலாஜி சித்தப்பா உறவு. டேனியல் பாலாஜியின் பெரியப்பாவும், நடிகர் முரளியின் தந்தையுமான சித்தலிங்கையா கன்னட படங்களில் இயக்குனராக பணியாற்றியவர்.

சன் டிவியில் வெளியான சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த சீரியலில் அவருடைய கதாப்பாத்திரத்தின் பெயரான ‘டேனியல்’ பாலாஜியின் பெயருடன் சேர்ந்து இவருக்கு அடையாளமானது.

சன் டிவியில் வெளிவந்த அலைகள் என்ற சீரியலில் பாலாஜி நடித்துள்ளார். அப்போது அலைகள் சீரியலின் இயக்குனர் சுந்தர் . கே.விஜயன் என்பவரே இவருக்கு ‘டேனியல்’ பாலாஜி என பெயரிட்டார்.

2002ஆம் ஆண்டு ஸ்ரீகாந்துடன் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் நடித்த டேனியல் பாலாஜி சீரியல் நடிகரில் இருந்து சினிமா நடிகராக அவதாரம் எடுத்தார். பின்னர் காதல் கொண்டேன் படத்தில் நடித்திருந்தார்.

டேனியல் பாலாஜி 48-வயதிலேயெ உயிரிழந்து இருப்பது திரையுலகினரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கல் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.

அண்மையில் நகைச்சுவை நடிகர் சேஷு காலமாகி 2 நாட்களில் நடிகர் டேனியல் பாலாஜி காலமான செய்தி திரைத்துறையினரை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்